பிரித்தானிய காலனித்துவ காலத்தில் அரச ஊழியர்களின் நலனோம்பலுக்கும் பரஸ்பர நல்லுறவுக்கும் இணைந்து அமைப்பொன்றை உருவாக்கிக்கொள்ளுவதற்கு மேற்கொண்ட உரையாடலின் பெறுபேறாக இந்த சங்கத்தை உருவாக்குவதற்கு வித்திடப்பட்டது. அதன் பிரகாரம் 1909 ஜனவரி மாதம் 09ஆம் திகதி சங்கம் ஆரம்பமானது. அத்துடன் அதன் முதலாவது மகாநாடு கோட்டை 'புனித பாவுல்' ஆண்கள் வித்தியாலயத்தில் 40 அங்கத்தினர்களின் பங்கேற்பில் நடைபெற்றது. இதன் ஆரம்பகால முன்னோடியாக முதலாவது தலைவராக ஜி.ஹைன் அவர்களும் முதலாவது செயலாளராக ஓவன் டீ. லா ஹர்ஸ் அவர்களும், பொருளாளராக கோட்ன் ஈ.டப்ளியு.ஜெக்ஸ் அவர்களும் நியமிக்கப்பட்டனர். 1938ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைக்கூட்டத்தில் முதல் முறையாக சங்கத்தின் பெயர் 'அரச உத்தியோகத்தர்களின் நலன்புரிச் சங்கம்' எனப் பயன்படுத்தப்பட்டது. சங்கத்தின் அங்கத்தவர்கள் அதிகரித்தமை, வருமானம் மற்றும் செலவுகள் விரிவடைந்தமை, சிறப்பான நிதி நிறுவனம் என்று கிடைத்த வரவேற்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 1971ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின்மூலம் 'அரச உத்தியோகத்தர்களின் நலன்புரிச் சங்கம்' என சட்டபூர்வமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ள முகாமைத்துவ குழுவுக்கு தலைவர் ஒருவர், உப தலைவர்கள் இருவர், 12 குழு அங்கத்தினர்கள் ஆகியோர் வருடாந்தம் நடைபெறுகின்ற பேரவைக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்படுகின்றனர். அதன் பிரகாரம் நிதி அமைச்சின் கண்காணிப்புடனான நிறுவனமாக இருக்கின்ற அதேவேளையில் திறைசேரி செயலாளரால் பெயர்க் குறிப்பிடப்படுகின்ற ஒருவர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் அச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவராகச் செயலாற்றிய பி.ஜி.ஜி. பிரேமகுமார் அவர்களின் அளவிடற்கரிய முயற்சியின் பெறுபேறாக அப்போதைய நிதியமைச்சர் பதவியை வகித்த கலாநிதி என்.எம்.பெரேரா அவர்களின் அனுசரணையில் தற்பொழுது தலைமை நிலையம் நடத்தப்படுகின்ற கொழும்பு 2, சர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தையில் உள்ள காணியை குத்தகை அடிப்படையில் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. சங்கத்தின் புகழ்பெற்ற தலைவராகவிருந்த ஆர்.எல். த அல்விஸ்  அவர்களின் துணிச்சல் காரணமாக சங்கத்தின் தலைமை நிலையத்திற்கு 1972 ஆகஸ்ட் 26ஆம் திகதி அப்போதைய நிதியமைச்சராகவிருந்த கௌரவ ரொனி டி மெல் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

கௌரவ தலைவர் ஆர்.எல். த அல்விஸ்  அவர்களின் தலைமையிலேயே அனைத்து வேலைகளும் பூர்த்திசெய்யப்பட்டு  1984 யூன் மாதம் 23ஆம் திகதி அப்போதைய பொதுநிருவாக அமைச்சின் செயலாளராக செயலாற்றிய டீ.பீ.ஐ.பி.எஸ். சிறிவர்தன அவர்களால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அத்தகைய பெருமைமிக்க வரலாற்றுக்கு உரிமைகோறுகின்ற நாம், அங்கத்தினர்களுக்கு மிக்க நம்பகத்தன்மையுடன் மிக்க சிநேகபூர்வமாக 1909ஆம் ஆண்டு முதல் இற்றை வரை தொடர்ச்சியாக சேவையாற்றி இராட்சத பலத்துடன் எழுந்து நிற்கின்றோம்.

  • கதிர்காம நகர மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மனங்கவர் சிறிய விடுமுறை இல்லம் தற்போதைய சங்கத்தின் பிரதான சொத்தாக இருக்கின்ற அதேவேளையில் அங்கத்தினர்களுக்கு மாத்திரமல்ல அங்கத்தவரல்லாதவர்களுக்கும் சலுகை விலையில் தங்குமிட வசதிகளை வழங்குகின்றது.
  • அநுராதபுர புனித பூமிக்கு சமீபத்தில் கட்டுகெலியாவையில் 80 பர்ச்சஸ் அழகான நிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எமது விடுமுறை இல்லமும் 2016 யூன் மாதம் முதல் சலுகை விலையில் தங்குமிட வசதிகளை வழங்குகின்றது.
  • இதற்கு மேலதிகமாக நுவரெலியாவிலும் திருகோணமலையிலும் விடுமுறை இல்லங்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • அங்கத்தினர்களுக்கு சலுகை அடிப்படையில் தம்பதிவ (இந்திய) யாத்திரை நிகழ்ச்சித்திட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
  • ශவலுவான நிதி பின்னணியுடனும் வினைத்திறன்மிக்க பணியாற்றொகுதியினருடனும் 12000க்கு மேற்பட்ட அங்கத்தினர்களுக்கு 16 கடன் திட்டங்களின் கீழ் ஒரே நாளில் கடன் வழங்கும் ஆற்றலையும் இன்று பெற்றுள்ளோம். 30 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை மாதமொன்றுக்கு அங்கத்தவர் கடனாக செலுத்தப்படுகின்றது.
  • கணக்கு நடவடிக்கைகளை கணினி மயப்படுத்தியதன் விளைவாக 2016ஆம் ஆண்டிலிருந்து ½ மணித்தியாலத்திற்குள் கடனை வழங்கும் ஆற்றலைப் பெற்றுள்ளோம்.
  • 2016ஆம் ஆண்டில் அங்கத்தினர்களின் சேமிப்புக்கு இலாப பங்கீடாக 6% செலுத்தப்பட்டுள்ளது.
  • சங்கத்தின் நோக்கத்தின் பிரகாரம் ரூ.50000.00க்கு மேற்படாமல் மருத்துவ உதவி, ஓய்வு பெறும்போதும் அங்கத்தவரின் மரணத்தின்போதும் நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றது.
கௌரவ தலைவர் ஆர்.எல். த அல்விஸ்  அவர்களின் தலைமையிலேயே அனைத்து வேலைகளும் பூர்த்திசெய்யப்பட்டு  1984 யூன் மாதம் 23ஆம் திகதி அப்போதைய பொதுநிருவாக அமைச்சின் செயலாளராக செயலாற்றிய டீ.பீ.ஐ.பி.எஸ். சிறிவர்தன அவர்களால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அத்தகைய பெருமைமிக்க வரலாற்றுக்கு உரிமைகோறுகின்ற நாம், அங்கத்தினர்களுக்கு மிக்க நம்பகத்தன்மையுடன் மிக்க சிநேகபூர்வமாக 1909ஆம் ஆண்டு முதல் இற்றை வரை தொடர்ச்சியாக சேவையாற்றி இராட்சத பலத்துடன் எழுந்து நிற்கின்றோம்.