பாரம்பரியத்திற்கு அப்பாற் சென்ற நிதியிடல் நடைமுறையில் நூறு வருடங்களுக்கு மேற்பட்ட நம்பிக்கைக்குரிய பெயரை உரித்தாக்கிகொண்டுள்ள எமது நன்னெறிமிக்க சிநேகபூர்வமான சேவையினூடாக உங்களுடைய அனைத்து நிதி தேவைகளுக்காக எம்முடன் இணையும்படி அழைக்கின்றோம்.

எமது நோக்கு

அரச ஊழியர்களின் நலனோம்பலுடன் நிதித்துறையில் என்றும் துணையாக இருத்தல்.

எமது சேவை

எமது நுண்நிதி நடவடிக்கைகளில் அங்கத்தினர்களின் தேவையறிந்து நவீனமயப்படுத்தி மிக உயர்ந்த வினைத்திறனுடன் சேவைகளை வழங்குதல். அங்கத்தினர்களின் தேவைகளை அடையாளம் கண்டு தொடர்ச்சியான சேவையை வழங்குவதற்காக வலுவான நிதி அடிப்படையைத் தயாரித்து அங்கத்தினர்களின் நலனோம்பலுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுதல், நிதி ஒழுங்கும் தொழில் அறிவும் பூரணமாகக் கொண்ட பணியாற்றொகுதியினரை உருவாக்குதல்.

எமது நோக்கம்

  • தமது அங்கத்தினரிடையே சிக்கனத்தை ஊக்குவித்தல்.
  • சுகவீனமடையும் சந்தர்ப்பங்களில், அனர்த்தங்களின்போது மற்றும் நிதி கஷ்டங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அங்கத்தினர்களுக்கு நிவாரணமளித்தல்.
  • சங்கத்தின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தினால் காலத்திற்குக் காலம் தீர்மானிக்கப்படுகின்ற நோக்கங்களுக்காக அங்கத்தினர்களுக்கு கடன் வழங்குதல்.
  • சங்கத்தின் ஒழுங்குவிதிகளை இணங்கியொழுகி அங்கத்தினர்களின் நலனுக்காக ஓய்வூதிய நலன்கள் திட்டமொன்றை அமைத்து நிருவகித்தல்.
  • சங்கத்தின் ஒழுங்குவிதிகளை இணங்கியொழுகி மரண பணிக்கொடை திட்டமொன்றை அமைத்து நிருவகித்தல்.
  • சங்கத்தின் ஒழுங்குவிதிகளை இணங்கியொழுகி அங்கத்தினர்களின் நலனுக்காகத் தேவைப்படக்கூடிய ஏனைய அனைத்தையும் செய்தல்.

பயனாளிகள் சங்கத்தின் நிறுவன அமைப்பு

எமது சட்ட தன்மை

1971ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின்மூலம் கூட்டிணைக்கப்பட்டுள்ளது.
(சங்கம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1909)