நீங்களும் எமது அங்கத்தவராக விரும்பினால் தாமதமின்றி எம்முடன் சேருங்கள். நிரந்தர ஓய்வூதியமுள்ள பதவி வகிக்கின்ற, 35 வயதுக்குக் குறைந்த அரச உத்தியோகத்தர்களும் மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களும் சங்கத்தில் அங்கத்துவம் பெறத் தகுதி பெறுகின்றனர். ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் குறித்த பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் ஆகக்குறைந்த தகைமை க.பொ.த (உயர் தரமாக) இருக்க வேண்டும்.

குறித்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து எமக்கு அனுப்புவதன்மூலம் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், அங்கத்துவம் கிடைத்ததன் பின்னர் ஒவ்வொரு அங்கத்தவரும் மாதாந்தம் ரூ. 600/- தமது சம்பளத்திலிருந்து அறவிட்டு அனுப்ப வேண்டும்.

அந்த அங்கத்துவ பணம் பின்வருமாறு வகைப்படுத்தப்படும்:

சேமிப்பு ரூ. 320
ஓய்வூதிய உதவு தொகை ரூ.  20
பொதுப்பணி செலவுகள் ரூ.  20
மருத்துவ உதவி (மருத்துவ கொடை அளிப்பு) ரூ.  40
ஓய்வுபெற்ற அங்கத்தினர்களுக்காக ரூ.  90
மரணமடைந்த அங்கத்தவர்களுக்காக ரூ.  60
விடுமுறை இல்லங்களுக்காக ரூ.  25
மரண உதவிக்காக ரூ.  25
மொத்தம் ரூ. 600

ஓய்வுபெறும் அங்கத்துவம்

அங்கத்தவர் ஒருவர் ஓய்வுபெற்றதன் பின்னரும் அங்கத்துவத்தைப் பேண முடியும். அவ்வாறு ஓய்வுபெற்றதன் பின்னர் அங்கத்துவத்தைப் பேண எதிர்பார்க்கின்ற அங்கத்தவர் ஒருவர் தொடர்பாக பின்வருமாறு செயலாற்றப்படுகிறது. அங்கத்தவர் ஒருவர் ஓய்வுபெற்றதன் பின்னரும் அங்கத்துவத்தைப் பேணுகின்றபோது மாதமொன்றுக்கு ரூபா 245/- அங்கத்துவ பணமாக அறவிடப்படும்.

அந்த அங்கத்துவ பணம் பின்வருமாறு வகைப்படுத்தப்படும்:

சேமிப்பு ரூ. 110
பொதுப்பணி செலவுகள் ரூ.  15
மருத்துவ உதவி (மருத்துவ கொடை அளிப்பு) ரூ.  40
மரணமடைந்த அங்கத்தவர்களுக்காக ரூ.  55
மரண உதவிக்காக ரூ.  25
மொத்தம் ரூ. 245