2015.07.25ஆம் திகதி நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களின் நலன்புரிச் சங்கத்தின் 106வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் என்னைத் தலைவராகத் தெரிவு செய்தமை தொடர்பில் அங்கத்தவர்களுக்கு எனது நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அங்கத்தவர்களின் சேமிப்பை மேம்படுத்துதல், சிக்கனத்தை மேம்படுத்துதல் / சலுகை நிபந்தனைகளின் மீது கடன் வழங்குதல், அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நிதி உதவுனராக இருத்தல். ஓய்வூதிய கொடைகள் மற்றும் மரண கொடைகள் வழங்குதல் போன்ற சங்கத்தின் முதன்மை நோக்கங்களை ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டு வினைத்திறன்மிக்க வகையில் நிறைவேற்றுவது எனது பொறுப்பு என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன்.

சங்கத்தின் நிர்வாகம், நிதி முகாமைத்துவம் மற்றும் நிதி ஒழுங்கு என்பவற்றை ஒழுங்கான திட்டங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அங்கத்தவர்களுக்கு அதிக சலுகை கிடைக்கக்கூடிய வகையில் மேற்குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன். இவற்றிற்கு மேலதிகமாக விடுமுறை இல்லங்கள், யாத்திரைகள் உள்ளிட்ட நலன்புரி வசதிகளை மேலும் சாதகமாக இருக்கும் வகையில் அங்கத்தவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பது எனது நோக்கமாகும்.

காலத்தின் தேவைக்கேற்ப பணமாகக் கடன் செலுத்துதல் 2016ஆம் ஆண்டில் ரூ. 20000.00இல் ஆரம்பிக்கப்பட்டு ரூ. 50000.001 வரை உயர்த்தப்பட்டது. அத்தொகையை இன்று 30 நிமிடங்களில் எம்மால் வழங்கக்கூடியதாக இருக்கின்றது.

அங்கத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட வசதி என்ற வகையில் 2017 யூலை மாதம் முதல் மு.ப. 8.00 மணிக்கு அலுவகம் திறக்கப்படுகின்றது.

பணியாட்டொகுதியினரின் மனோபாவ வளர்ச்சி, உற்பத்தித் திறன் மற்றும் வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்குதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு பணியாட்டொகுதியினருக்காக 2017இல் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று நடத்தப்பட்டதோடு சேவையின் அவசியம் கருதி தகுதிவாய்ந்த வெளி நிறுவங்கள் மூலம் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைமை அலுவலகம், கதிர்காம விடுமுறை இல்லம் என்பவை கண்கவரும் விதத்தில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு யூலை மாதத்தில் அநுராதபுர விடுமுறை இல்லத்தை அங்கத்தினர்களின் பயன்பாட்டுக்காகத் திறக்க முடிந்துள்ளது.

அங்கத்தவர்களின் தேவைகளை இனம்கண்டு அதன் பிரகாரம் கடன் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இனிவரும் நாட்களில் அதை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றப்படும்.

நானும் முகாமைத்துவ குழுவும் சங்கத்தின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் நன்றாகப் புரிந்துக்கொண்டு அதன் பிரகாரம் அங்கத்தினர்களின் தேவையின் பொருட்டு வினைத்திறன் மிக்க பயனுறு சேவையை நிறைவேற்ற திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

நிஹால் பிரான்சிஸ்கு
தலைவர்.